அரியலூர் மாவட்டத்தில் வணிகர் சங்க தலைவராக இருந்த ஜெ.குரு என்கின்ற குருநாதருக்கு காடுவெட்டியில் 2 கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. அவரது நினைவு தினத்தன்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அங்கு வந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம். அதன்படி இன்று மே 25 அரியலூர் மாவட்டத்திற்கு தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வர வாய்ப்புள்ளது. அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க பலத்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க அரியலூர் மாவட்டத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 22 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடுமாறு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மற்றும் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட மேலாளர் செல்வராஜ் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கடிதம் அனுப்பினார். அவ்வகையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் உள்ள அரசு மதுபானக் கடைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.