Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா எனும் கொடிய வைரஸ் மக்களை ஆட்டிப் படைத்து வந்தது. அதிலும் குறிப்பாக கல்வி நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. இதையடுத்து கொரோனா தொற்று வைரஸ் சற்று குறைந்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் இயங்கி வந்தன. இதையடுத்து மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியாகியது.

அதன்படி பொதுத்தேர்வுகள் நடைபெற்று முதலில் 1 -9 வகுப்பு  மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 1-10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சற்றுமுன் அறிவித்துள்ளார். பின் 11ஆம் வகுப்புக்கு ஜூன் 27ஆம் தேதியும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளார்.

Categories

Tech |