Categories
சினிமா தமிழ் சினிமா

சுஷாந்த்துக்கு நடந்த கொடுமை மாதிரியே SK விற்கும் நடந்தது….. பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு பேட்டி…!!!!!!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நுழைந்து இப்போது தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும், பாடலாசிரியராகவும் திகழ்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள டான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது நேரடி தெலுங்கு படமொன்றில் சிவகார்த்திகேயன் நடித்து வருகின்றார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பினை பெற்று இருந்தது.

அதனை தொடர்ந்து அறிமுக இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்த படத்தை அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபிசக்கரவர்த்தி இயக்கி இருக்கின்றார். டான் படத்தை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் அனுதீப்  இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழியில் உருவாகி வரும் படம் ஒன்றில் நடித்து வருகின்றார். இதனைத் தொடர்ந்து கமல் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படம் உருவாகி வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் சிவகார்த்திகேயன் பற்றி தயாரிப்பாளர் ரவீந்தர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்த சிவகார்த்திகேயன் வளர்ச்சி மிகவும் அபாரமானது.

மேலும் பல நடிகர்கள் பல ஆண்டுகளாக செய்ததை சிவகார்த்திகேயன் மிகக் குறுகிய காலகட்டத்திலேயே செய்து விட்டதால் அது சிலருக்கு பிடிக்காமல் போனது. அதனாலேயே அவருக்கு பல வழிகளில் பல பிரச்சினைகளை கொடுத்திருக்கின்றனர். கிட்டத்தட்ட பாலிவுட்டில் சுஷாந்த்துக்கு நடந்த கொடுமை மாதிரி சிவகார்த்திகேயனுக்கும் கொடுமைகள் நடைபெற்றுள்ளது. ஆனால் சிவகார்த்திகேயன் விவரமானவர், படித்தவர் அதனால் அதனை நன்றாக ஹேண்டில் செய்து இருக்கின்றார். சிவகார்த்திகேயனுக்கு நடைபெற்ற கொடுமை மாதிரி எந்த ஒரு நடிகருக்கும் நடந்ததில்லை. இவ்வாறு தயாரிப்பாளர் ரவீந்தர் சிவகார்த்திகேயன் பற்றி பேசியிருப்பது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |