விருதுநகர் மாவட்ட ஆட்சியாளர் மேகநாதரெட்டி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சுகன்யா சம்ரிதி திட்டத்தை பிரதமர் மோடி ஜனவரி 22ஆம் தேதி 2015 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். இது பெண் குழந்தைகளின் உயர் கல்வி, திருமணம் போன்ற எதிர்காலத்திற்கான சேமிப்பு திட்டம் ஆகும். இந்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளதுஇந்த திட்டத்தில் பிறந்த குழந்தைகள் முதல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இந்த திட்டத்தில் சேரலாம். மற்ற திட்டங்களை விட செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கூடுதலாக வட்டி வீதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.250 செலுத்தி கணக்கை தொடங்கலாம். இந்த திட்டத்தில் முதிர்வு தொகையில் 50% வைப்பு தொகையை குழந்தைகளின் மேற்படிப்புக்காக பெற்றுக்கொள்ளலாம் அல்லது 20 வயது நிறைவடையும் போது கூட பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் தொடங்கப்படும்.
இந்த திட்டத்தை பெண் குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர்கள் தங்கள் குழந்தையின் பெயரில் பிறப்புச் சான்றிதழ் சமர்ப்பித்து சுகன்யா சம்ரிதி திட்டம் சேமிப்பு கணக்கு தொடங்கலாம். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.250 செலுத்தி அஞ்சலகங்களில் அல்லது வங்கிகளில் கணக்கு தொடங்கலாம். அதனைத் தொடர்ந்து ஒரு நிதி ஆண்டில் ரூ.250 செலுத்தினால் அதிகபட்சமாக 1,50,000 வரை வைப்புத் தொகையாக செலுத்த முடியும். மொத்தம் 15 ஆண்டுகள் மட்டும் பணம் செலுத்தினால் போதுமானது. தற்போது 7.6 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. மேலும் இந்த கணக்கில் ஒரு நிதி ஆண்டில் செலுத்தப்படும் தொகைக்கு வருமான வரி விலக்கு அளிக்கப் படுகிறது. அதுமட்டுமில்லாமல் பெண்ணின் திருமணத்துக்கு பிறகு கணக்கு முதலீடுகள் அடைவதற்கு முன்பே கணக்கு எந்தவித இழப்பும் இல்லாமல் முடித்துக் கொள்ளலாம் என விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள அஞ்சலகத்தில் சென்று செல்வமகள் திட்டத்தின் கீழ் சேமிப்பு கணக்கு தொடங்கி பயன் பெறலாம் என்று விருதுநகர் ஆட்சியாளர் அறிவித்துள்ளார்.