கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பள்ளி பாடங்கள் குறைக்கப்பட்ட அதற்கு ஏற்ப கற்றல், கற்பித்தல் நிகழ்வு நடந்தது தொடர்ந்து வாரத்திற்கு ஆறு நாட்கள் வேலை நாட்களாக இருந்தது. இதன் மூலம் மாணவர்கள் மன அழுத்தத்தோடு குறைந்த நாட்களே பள்ளிக்கு வந்ததாக கூறப்பட்டது. இதனால் எதிர் வரும் கல்வியாண்டில் பாடங்களை குறைக்க கூடாது என்பதற்காகவும், ஜூன் 20 க்கு முன்னர் பள்ளிகள் திறக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை தமிழ்நாடு ஆசிரியர் சங்க அறிக்கை மூலம் அரசுக்கு வலியுறுத்தப்பட்ட நிலையில், வரும் கல்வியாண்டில் சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.
மேலும் 2022 – 23 ஆம் கல்வியாண்டில் 210 வேலை நாட்கள் உடன் பள்ளிகள் செயல்படும். அனைத்து சனிக்கிழமை உட்பட 155 நாள் விடுமுறை என்று அமைச்சர் அறிவித்துள்ளார். காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வு கட்டாயம் நடைபெறும். நிதி நிலை சீராகும் போது பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். ஜூன் 13ஆம் தேதி காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அமலுக்கு வராது எனவும் அவர் தெரிவித்துள்ளார் .