மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்கடி பதவி மற்றும் சம்பள உயர்வு முதலான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 2 முறையாவது அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படும். ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படியை சம்பள உயர்வு மார்ச் மாதத்தில் உயர்த்தப்படும் மற்றும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி சம்பள உயர்வு கிடைக்கும். ஆனால் கொரோனா காலகட்டத்தில் 28%ஆக இருந்த அகவிலைப்படி 3% அதிகரிப்பு 31% ஆக இருந்தது. இந்த சம்பள உயர்வால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைந்தார்கள்.
அதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதத்தில் மேலும் 3% சம்பளம் உயர்வு வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 7வது ஊதிய குழுவின் கீழ் 34% DA மற்றும் DR பெற்று வருகின்றனர். அதனைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு DA அதிகரித்தால்ரூ.2.60 லட்சம் வரை சம்பளம் உயர வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு ஊழியரின் சம்பளம் ரூ.20,000என்றால் 4% என்ற விகிதத்தில் சம்பள உயர்வு அளிக்கப்பட்டால் மாதந்தோறும் ஊழியருக்கு ரூ.800 வரை கூடுதல் சம்பளம் பெற வாய்ப்புள்ளது. மேலும் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி அதிகரிப்பது குறித்து விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.