Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல ரவுடி” சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மாதையனுக்கு  உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள மத்திய சிறையில் சந்தன ம்ரக்கடத்தல் வீரப்பனின் அண்ணனான மாதையன் என்பவர் கடந்த 1987-ஆம் ஆண்டு சிதம்பரம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில்  அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் இருதய நோய், சர்க்கரை நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் கடந்த 2  வாரங்களுக்கு முன்பு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனையடுத்து மீண்டும்  அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாதையன் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறியுள்ளனர். இது குறித்து அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |