Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இவ்வளவு சொத்தா ?…. ஆக்கிரமிப்பில் ஈடுபடும் அறங்காவலர் குழு…. ஆலோசனை குழு தலைவரின் கோரிக்கை….!!!!

ஆக்கிரமிக்கப்பட்ட தர்கா சொத்துக்களை அறங்காவலர் குழு மீட்டு வருகின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில்  நாகூர் தர்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த தர்காவிற்கு சொந்தமான சொத்துக்களை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்ற தர்கா அறங்காவலர் குழு  ஆக்கிரமித்த சொத்துக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பவர் அனுபவித்து வந்த தர்காவிற்கு சொந்தமான 1 லட்சத்து 60 ஆயிரத்து 390 சதுர அடி நிலத்தை அறங்காவலர்   குழுவிடம் ஒப்படைத்துள்ளார்.

இதுகுறித்து தர்கா ஆலோசனைக்குழு தலைவர் முகமது கலிபா சாகிப் கூறியதாவது. தற்போது நடைபெற்று வரும் சொத்துக்கள் மீட்பு பணிகள் குறித்து தகவல் அறிந்த  சிலர் தாங்களாகவே முன்வந்து  ஆக்கிரமித்த சொத்துகளை ஒப்படைத்து வருகின்றனர். மேலும் சொத்துக்களை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்கள்  தாங்களாகவே  நிர்வாகிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |