Categories
தேசிய செய்திகள்

கோயில் நிலம் ஆக்கிரமிப்பு…. விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!

கோயில்  நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

சென்னையில் அமைந்திருக்கும் திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் சென்னையில் உள்ள திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோவில் இருக்கிறது.

இந்த கோவிலுக்கு சொந்தமான  ஆவடி தாலுகா வெள்ளலூரில் 134 ஏக்கர் அசையா சொத்துக்கள் உள்ளது. மேலும் இந்த சொத்துக்கள் மூலமாக கோவிலுக்கு எந்தவிதமான வருமானமும் வரவில்லை. ஆனால் கோவில் சொத்துக்கள் போலி ஆவணம் மூலமாக ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த நிலையில் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து சொத்துக்களை மீட்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறைக்கு கடந்த 2019 மே 27-ஆம் தேதி அனுப்பிய மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறநிலையத்துறை ஆணையர் அறநிலையத் துறை கூடுதல் ஆணையருக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

அதன் அடிப்படையில் கூடுதல் ஆணையர் நடவடிக்கை எடுத்து அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையில் கோவில் சம்பந்தப்பட்ட கோவில் சொத்துக்கள் அளவீடு செய்யப்பட்டிருப்பதாகவும், கோவில்களில் பல வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு இருப்பதாகவும், தெரிவிக்கப்பட்டிருப்பதாக எனக்கு தகவல் வந்திருக்கிறது. இந்த தகவல் எனக்கு தெரிய வந்தவுடன் உடனடியாக கோவில் மேலாளருக்கு கடந்த 22ஆம் தேதி மனு அளித்து இருக்கின்றேன். ஆனால் இதுவரை கோவில் நிலங்களை மீட்கவும் பாதுகாப்பதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதனால் கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்குமாறு அறநிலையத்துறைக்கு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ். சுப்பிரமணியன், சி.சரவணன் போன்றோர் அடங்கிய அமர்வு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு விளக்கம் அளித்து அறநிலையத்துறை வழக்கறிஞர் ஏற்கனவே கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் சர்வே செய்யப்பட்டிருக்கிறது. மேலும் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோவிலுக்கு சொந்தமான 134 ஏக்கரில் நிலத்தில் பல்வேறு தரப்பினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் நீர் நிலைகளும் அடங்கும் என்பதால் அவை நில அளவை செய்யப்பட்டு பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கின்றார். இதனை தொடர்ந்து நீதிபதிகள் மனுதாரர் தெரிவித்துள்ள கோவிலுக்கு சொந்தமான சுமார் 134 ஏக்கர் நிலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து இருக்கின்றார்.

Categories

Tech |