கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபடியே படம் பார்க்க டிஜிட்டல் தளங்கள் சிறந்த பொழுதுபோக்காக இருந்தது. ஓடிடி தளங்கள் முழுநேர வியாபார நோக்கில் தற்போது செயல்படத் தொடங்கியுள்ளது. முதலில் மாத சந்தா வழங்குவது மட்டும் இருந்த நிலையில் தற்போது குறிப்பிட்ட படங்களை பார்ப்பதற்கு தனியே பணம் செலுத்தும் முறையை டிஜிட்டல் படங்கள் கொண்டு வந்துள்ளன. அதன்படி கடந்த சில மாதங்களில் மட்டும் 160 திரைப்படங்கள் பணம் கட்டி பார்க்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதே முறையை ஜீ5, நெட்ஃப்ளிக்ஸ் பயன்படுத்தி வருகிறது.
அந்த வகையில் டிஜிட்டல் தளங்கள் படங்களும் தனி தொகையை வசூலித்து வரும் நிலையில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் விளம்பரங்கள் மூலம் வருமானத்தை அதிகரித்து வருகின்றது. தற்போது நெட்ஃப்ளிக்ஸ் இந்த முறை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் விளம்பரங்களைப் பார்க்கவா சந்தா தொகையாக நூறு கணக்கில் பணம் கொடுக்கிறோம் என்று சப்ஸ்கிரைபர் புலம்பி வருகின்றனர். ஓடிடி தளங்களின் இது போன்ற வியாபார உத்திகளால் மீண்டும் பைரஸிக்கே வழிவகுக்கும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.