Categories
சினிமா தமிழ் சினிமா

உலகளவில் ரூ.100 கோடி வசூலித்த ‘டான்’….. கொண்டாட்டத்தில் SK ரசிகர்கள்….!!!!

இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான திரைப்படம் டான். இந்த திரைப்படத்தில் பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரகனி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ள இந்த படம் கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கல்லூரி தொடர்பான கதை, தந்தை பாசம் என பலதரப்பட்ட உணர்வுகளைக் கொண்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிவருகிறது.

இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் 100 கோடி வசூலித்ததாக படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் 100 கோடி சாதனை படைத்த நிலையில், தற்போது அவரின் டான் படமும் 100 கோடி சாதனையை படைத்து அந்த பட்டியலில் இணைந்துள்ளது.

Categories

Tech |