வயது முதிர்வு காரணமாக தம்பதியினர் விஷம் குடித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபி நாயக்கன்காட்டில் பெரிய தம்பி(77) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பச்சையம்மாள்(72) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இரண்டு பேரும் மன உளைச்சலில் இருந்தனர். இதனால் வாழ்வதை விட சாவதே மேல் என முடிவெடுத்த தம்பதியினர் வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி கிடந்தனர்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இரண்டு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று பச்சையம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பெரியதம்பிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.