கடலில் இருக்கும் பாறையில் சிக்கி 3 நாட்களாக சிரமப்பட்ட மயிலை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் மரணப்பாறை ஒன்று அமைந்துள்ளது. இந்த பாறையில் கடந்த 3 நாட்களாக ஆண் மயில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனை பார்த்ததும் கடற்கரை வியாபாரிகள் உடனடியாக பூதப்பாண்டி வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் திலீபன் தலைமையில் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று கடலின் உட்பகுதியில் இருக்கும் பாறையில் சிக்கியிருந்த மயிலை மீட்டனர். அதன்பிறகு முதலுதவி சிகிச்சை அளித்து மயிலை வனப்பகுதியில் விட்டனர்.