Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…உறவினர்கள் வருகை உண்டு..செலவை கட்டுப்படுத்தி கொள்ளுங்கள்..!!

மகர ராசி அன்பர்கள், இன்று எந்தச் செயலையும் நீங்கள் பரிசீலனை செய்து தான் செய்ய வேண்டும், தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற நண்பரால் உதவிகள் உண்டாகும். புதிய இனங்களில் செலவு ஏற்படலாம், உறவினர்களை சந்திக்கும் வாய்ப்பு உருவாகும். இன்று குடும்பத்தில் எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்படலாம், கணவன், மனைவிக்கு இடையே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

பிள்ளைகளிடம் பக்குவமாக நடந்து கொள்வது நன்மையைக் கொடுக்கும். உறவினர்கள், நண்பர்களின் வருகை இன்று இருக்கும், செலவு கொஞ்சம் அதிகம் ஆகும், கூடுமானவரை செலவு மட்டும் கொஞ்சம் கட்டுப்படுத்தி கொள்ளுங்கள்,  இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி செல்லும், நல்ல முன்னேற்றமான வாய்ப்புகள் இருக்கும். கொஞ்சம் கூர்மையாக கவனத்துடன் பாடத்தை படிப்பது ரொம்ப நலல்து, படித்த பாடத்தை எழுதி பாருங்கள் ரொம்ப சிறப்பாக இருக்கும். இன்று  காதலர்களுக்கு பயப்பட கூடிய சூழல் இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்ட்டத்தை கொடுக்க கூடிய அளவிலே இருக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள்,அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |