மதுரை- போடி இடையேயான ரயில் சேவையை தொடங்க உள்ள நிலையில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
மதுரை- போடி இடையேயான 90 கிலோ மீட்டர் தூரத்துக்கு மீட்டர் கேஜ் ரயில் பாதையை இருந்த நிலையில் அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கு திட்டம் அமைக்கப்பட்டு, சென்ற 2011-ஆம் வருடம் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு அதற்கான திட்ட பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் தேனி வரையிலான திட்ட பணிகள் முழுமை பெற்ற நிலையில் தேனியிலிருந்து போடி வரையிலான பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்தத் திட்ட பணிகளானது தேனி வரை முழுமை பெற்றதையடுத்து விரைவு ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இதையடுத்து இந்த ரயில் பாதையில் ரயில்களை இயக்க ரயில்வே துறை அனுமதி அளித்து இருக்கின்றது. இதனால் தேனி, மதுரை மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த ரயில் பாதையில் ரயில் சேவையை இயக்க பிரதமர் மோடி நாளை காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைக்கவுள்ளார். மேலும் வெள்ளிக் கிழமையிலிருந்து முன்பதிவு இல்லாமல் பயணிகள் பயணம் செய்யும் வகையில் ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றது.