Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் “வீட்ல விசேஷம்”… படம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்…!!!!!

ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் வீட்ல விசேஷம் திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

முதலில் ஆர்ஜேவாக தனது கெரியரை தொடங்கி காமெடி வேடத்தில் நடித்து தற்போது ஹீரோ, இயக்குனர் என தனக்குள் இருக்கும் பல திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார். இவர் கடைசியாக மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் அவரே திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

தற்போது வீட்ல விசேஷம் என்ற திரைப் படத்தில் ஹீரோவாக இவர் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு சத்யராஜ் அப்பாவாகவும் ஊர்வசி அம்மாவாகவும் நடிக்கின்றார்கள். மேலும் படத்தை ஜீ ஸ்டியோஸ் தயாரிக்கின்றது. இந்நிலையில் படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் ஜூன் 17-ஆம் தேதி படம் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளனர்.

ட்ரெய்லர் நாளை மாலை 7 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் பிளே ஆப் சுற்றில் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Categories

Tech |