மதுபோதையில் தந்தை மகனை அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆட்டையாம்பட்டியில் விசைத்தறி தொழிலாளியான சுப்பிரமணி(67) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கேட்டரிங் தொழிலாளியான மணி(37) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மதுபோதையில் தந்தை மகன் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மது போதையில் சுப்பிரமணி மற்றும் மணி ஆகிய இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் கோபமடைந்த சுப்பிரமணி உருட்டுக்கட்டையால் தனது மகனை சரமாரியாக தாக்கியதால் சம்பவ இடத்திலேயே மணி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மணியின் சடலத்தை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுப்பிரமணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.