பெண்ணை தாக்கிய கணவர் உள்பட 2 இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சி.என் கிராமம் பகுதியில் உடையார்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுப்புலட்சுமி தாழையூத்தில் இருக்கும் தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று உடையார், தனது உறவினரான நாகராஜன் என்பவருடன் சுப்புலட்சுமியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார்.
மேலும் இருவரும் இணைந்து சுபலட்சுமியை தாக்கி வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுப்புலட்சுமி தாழையூத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் உடையார் மற்றும் நாகராஜன் ஆகிய 2 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனர்.