Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மாணவிக்கு நடந்த கொடுமை…. பெற்றோர் அளித்த புகார்…. பெயிண்டர் போக்சோவில் கைது….!!

பெயிண்டரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் வையாபுரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீதர் என்ற மகன் உள்ளார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஸ்ரீதர் 9-ம் வகுப்பு படிக்கும் 16 வயது பள்ளி மாணவி ஒருவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதனையறிந்த மாணவியின் பெற்றோர் அவருடைய உறவினர் வீட்டில் கொண்டு போய் விட்டுள்ளனர்.

ஆனால் தொடர்ந்து ஸ்ரீதர் மாணவிக்கு திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் உடுமலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஸ்ரீதரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |