Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. தொழிலாளர்களின் தகவல்…. பல லட்ச மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்….!!

மில்லில் திடீரென தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள உரல்பட்டி பகுதியில் அருண்குமார் என்பவருக்கு சொந்தமான பஞ்சு மில் ஒன்று உள்ளது. இந்த மில்லில் திடீரென்று இன்று தீ பிடித்தது. இதனை பார்த்த அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் இதுகுறித்து உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின் தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள் எந்திரங்கள் மற்றும் பஞ்சுகள் எரிந்து நாசமானது. இதுகுறித்து காவல்துறையினர் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதுகின்றனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |