இலங்கை நாட்டில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இங்கு பெட்ரோல், டீசல் என அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் இலங்கை அரசு திணறுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும் இங்கு ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிராக போராட்டங்கள் நிலவி வருகின்றனர்.
இந்த போராட்டத்துக்கு அடி பணிந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகியுள்ளார். இதனால் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே கடந்த மே மாதம் பதவியேற்றுள்ளார். இதனை தொடர்ந்து பல்வேறு துறைகளுக்கும் மந்திரிகளை அதிபா் கோத்தபய ராஜபக்சே நியமித்து வருகிறாா். கடந்த மே மாதம் 14-ஆம் தேதி 4 மந்திரிகளும், 20-ஆம் தேதி 9 மந்திரிகளும் பதவியேற்றுள்ளனா்.
மேலும் தொடா்ச்சியாக கடந்த திங்கள்கிழமை அன்று 8 அமைச்சா்களும் பதவியேற்றுள்ளனா். இருப்பினும் நிதி மந்திரி பதவியை யாருக்கும் வழங்கவில்லை என்பதால் நேற்று அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூடுதல் பொறுப்பாக நிதித்துறை மந்திரியாக பதவியேற்றுக்கொண்டார். அதன்படி அதிபர் கோத்பய ராஜபக்சே முன்னிலையில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். இது குறித்து பேசிய ரணில் விக்ரமசிங்கே, நிதித்துறை பொறுப்பையும் ஏற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்கே, “இலங்கையில் அடுத்த ஆறு வாரத்திற்குள் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். உள்கட்டமைப்பு திட்டங்களை குறைத்து, இரண்டு ஆண்டு நிவாரண திட்டங்களுக்கு நிதி திருப்பி விடப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.