பிரிட்டன் எலிசபெத் மகாராணி முடிசூட்டப்பட்டு 70 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
பிரிட்டன் நாட்டில் எலிசபெத் ராணி ஆக முடி சூட்டப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மிகப் பெரிய தங்க நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 1952ஆம் ஆண்டு எலிசபெத் பிரிட்டன் ராணியாக முடிசூட்டப்பட்டார். இவருக்கு தற்போது 96 வயதாகிறது. பிரிட்டன் ராணியாக அதிக ஆண்டுகள் இருக்கும் மகாராணி எலிசபெத் தான். இவரின் 70-ம் ஆண்டு பிளாட்டினம் ஜூபிலியை ராயல் அரண்மனையில் வைத்து நான்கு நாட்கள் விழாவாக ஜூன் மாதம் கொண்டாடப்பட உள்ளது.
இதனையடுத்து ஆண்டுகால நிறைவை முன்னிட்டு 15 கிலோ எடையில் மிகப்பெரிய தங்க நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாணயம் 8.7 அங்குலம் விட்டம் கொண்டுள்ளது. இந்த நாணயத்தை செய்ய 400 மணி நேரம் ஆகியுள்ளது. இதனுடைய மதிப்பு 18 ஆயிரத்து 772 டாலர்கள் என்று கூறப்படுகின்றது.