தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காண மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு சென்று நேரடி ஆய்வு செய்ய வேண்டும் என்று வருவாய்த் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை ஆட்சியர்கள் நேரடியாக தணிக்கை செய்யவும் அவர் உத்தரவிட்டார். நேற்று சென்னையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர் ஆய்வு செய்த நிலையில் அமைச்சர் இந்த உத்தரவை தற்போது பிறப்பித்துள்ளார்.