கன்னட திரைப்படம் நடிகையான சைத்ரா ஹள்ளிகேரி ஆவார். இவர் குருசிஷ்யா, ஸ்ரீதனம்மா தேவி உட்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கும், பாலாஜி என்பவருக்கும் கடந்த 2006ஆம் வருடம் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் மைசூரு ஜெயலட்சுமிபுரம் காவல் நிலையத்தில் நடிகை சைத்ரா ஹள்ளிகேரி, தன் கணவர், மாமனார் மீது புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் “தனக்கு தெரியாமலேயே வங்கி கணக்கின் வாயிலாக தன் கையெழுத்தை போலியாக போட்டு தங்க நகைக்கடன் வாங்கியுள்ளனர். இதற்கு வங்கிகிளை மேலாளரும் உடந்தையாக இருக்கிறார்.
இது தொடர்பாக கேட்டபோது கணவரும், மாமனாரும் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து நடிகை சைத்ராவின் கணவர் பாலாஜி, மாமனார் பொத்தராஜ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முன்பே தன்னை அடித்ததாகவும், சீரியலில் நடித்து சம்பாதித்த பணத்தை பறித்து கொண்டதாகவும் கணவர் பாலாஜி மீது கடந்த 2018-ல் சைத்ரா, போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது இருவீட்டினரும் அவரை சமாதானம் செய்து புகாரை வாபஸ் பெற வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.