Categories
பல்சுவை

“ஆண்ட்ராய்டு போன்” யாராவது திருடி விட்டால்…. எப்படி கண்டுபிடிக்கலாம் தெரியுமா….?

நீங்கள் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனை யாராவது திருடினாலோ அல்லது நீங்கள் தொலைத்து விட்டாலோ அதை எப்படி கண்டுபிடிக்கலாம் என்பதற்கான சில வழிமுறைகளை பார்க்கலாம். நம்முடைய ஆண்ட்ராய்டு போனை யாராவது திருடி விட்டால் முதலில் நம்முடைய மொபைல் டேட்டா மற்றும் ஜிபிஎஸ் போன்றவற்றை தான்  ஆப் செய்வார்கள்.

இதை அவர்கள் ஆப் செய்யாமல் இருப்பதற்கு முதலில் உங்கள் போனின்  செட்டிங்ஸ்க்குள்   சிலவற்றை மாற்ற வேண்டும். அதாவது ஆண்ட்ராய்ட் போனின் settings-ல் செல்ல வேண்டும். அதன்பிறகு notification settings-குள் நுழைய வேண்டும். அதில் lock screen notification-குள் சென்று lock screen to access notification drawer என்ற ஆப்ஷனை ஆப் செய்ய வேண்டும்.

இதை ஆப் செய்வதால் நம்முடைய ஆண்ட்ராய்டு போனின் டேட்டா கனெக்ஷன் மற்றும் ஜிபிஎஸ் போன்றவற்றை யாராலும் ஆப் செய்ய முடியாது. இதனையடுத்து settings-குள்‌ கூகுள் ஆப்சனுக்குள் செல்ல வேண்டும். அதில் find my device என்ற ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும். அதை ஆன் செய்வதன் மூலம் நம்முடைய ஆண்ட்ராய்டு எங்கு இருந்தாலும் அதை Google account மூலமாக நம்மால் எளிதில் கண்டுபிடிக்கலாம்.

இதைத் தொடர்ந்து settings-குள் location ஆப்ஷனுக்குள் சென்று Google location accuracy-குள் improve location accuracy ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும். அதன்பிறகு backup and reset என்ற ஆப்ஷனுக்குள் சென்று backup my data என்ற ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும். இதன் மூலம் உங்கள் போனில் இருக்கும் டேட்டாக்களை யாராலும் எடுக்க முடியாது. மேலும் மேற்கண்டவற்றை செய்வதன் மூலம் உங்கள் ஆண்ட்ராய்டு போனை யாராவது திருடி விட்டாலோ அல்லது நீங்கள் தொலைத்து விட்டாலோ  கண்டுபிடித்து விடலாம்.

Categories

Tech |