Categories
சென்னை மாவட்ட செய்திகள்

” கொண்டு வந்த வெளிநாட்டு கரன்சிகள்” வசமாக சிக்கிய 5 பேர்…. நடைபெறும் தீவிர விசாரணை….!!!!

வெளிநாட்டு கரன்சிகளை கொண்டு வந்த 5 வாலிபர்களை அதிகாரிகள்  கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள  மீனம்பாக்கம் பகுதிகள் விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் அனைத்து பயணிகளின் உடைமைகளையும் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். அதேபோல் நேற்று துபாய் செல்ல வந்த நசுருதீன், ராஜா முகமது, சாகிர் உசேன் மற்றும் கொழும்பு செல்ல வந்த விஷ்ணு சாகர், அப்சர் அலி ஆகியோரின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அந்த சோதனையில் அவர்கள் அமெரிக்க டாலர்கள் மற்றும் சவுதி ரியால்கள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள்  கரன்சிகளை கொண்டு வந்த 5 பேரை  கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் 50 லட்சத்து 70 ஆயிரம்  ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை  பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |