நாடு முழுவதும் கொரோனா கால கட்டத்தின் போது மத்திய அரசு சார்பில் பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனா திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி 80 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ரேஷனில் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டது. அதாவது ஒரு குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் மாதந்தோறும் தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் இன்று வரை மக்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் சிறப்பாக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தகுதியுள்ள அனைத்து மக்களுக்கும் வழங்குவதில் அரசு உறுதியாக இருக்கிறது என்று நேற்று முதல்வர் தெரிவித்துள்ளார். அதாவது விதான் இது எங்க இருக்கு பரிஷத்தில் கேள்வி நேரத்தின்போது, பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் பீம்ராவ் அம்பேத்கர், உத்திரபிரதேசத்தில் எத்தனை ஏழை எளிய குடும்பங்கள் இலவச ரேஷன் பலன்களை பெறுவார்கள் என்று கேள்வி கேட்டிருந்தார்.
அதற்கு, தகுதியுடைய அனைத்து குடும்பங்களுக்கும் இலவச ரேஷன் வழங்கப்பட்டு வருவருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் தகுதியற்றவர்கள் தவறாக பயன்படுத்தப்படும் ரேஷன் கார்டுகளை நீக்குவதன் மூலம் எந்த காரணத்திற்காகவும் விடுபட்ட அனைவருக்கும் காப்பீடு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் “வறுமை என்பது நிலையானது அல்ல, இன்று ஏழையாக இருப்பவன் நாளை பணக்காரன் ஆகலாம், இன்று பணக்காரனாக இருப்பவன் நாளை ஏழை ஆகலாம்” அதனால்தான் தகுதியான பயனாளிகள் பலன்களை இழக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக ரேஷன் கார்டுகளை அடிக்கடி சரிபார்க்கும் நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்கிறோம் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா பரவல் அதிகமாக இருந்த நேரத்தில் அனைத்து ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் ஒவ்வொரு மாதமும் உணவு கிட் மற்றும் இலவச ரேஷன் பெறுவதை நாங்கள் உறுதி செய்தோம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.