தமிழகத்தில் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களிலும் ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவது வழக்கம். பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும். அவ்வாறே மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளுக்கு முன்னரே அறிவிப்புகளும் வெளியாகும்.
அதன்படி சந்தைப்பேட்டை துணை மின் நிலையம்,பெருமாநல்லூர் துணை மின் நிலையம் மற்றும் வேலம்பாளையம் துணை மின் நிலையம் ஆகிய பகுதிகளில் மே 27-ஆம் தேதி அதாவது நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.அதனால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தைப் பேட்டை துணை மின் நிலையம்: பகுதியை சுற்றியுள்ள புதுார் பிரிவு, எல்லோரா கார்டன், சுப்ரமணிய நகர் மற்றும் செரங்காடு பகுதிகள்
பெருமாநல்லூர் துணை மின் நிலையம்: பகுதியை சுற்றியுள்ள குருவாயூரப்பன் நகர் கிழக்கு, படையப்பா நகர், நல்லகட்டிபாளையம், கூலிபாளையம், வாவிபாளையம், வலசுப்பாளையம், பொரசப்பாளையம், ரோஜா கார்டன், பாலசமுத்திரம், தாண்டாகவுண்டன் புதூர், வாரணாசி பாளையம், செரங்காடு, தெற்கு சீராபாளையம், காளி பாளையம் புதூர், பெருமாநல்லுார், அண்ணா நகர், பாண்டியன் நகர் ஒரு பகுதி, பூலுவபட்டி நால்ரோடு மற்றும் காமராஜ் நகர் பகுதிகள்
வேலம்பாளையம் துணை மின் நிலையம்: தண்ணீர் பந்தல் காலனி, அம்மாபாளையம் ஒரு பகுதி, 15 வேலம்பாளையம் ஒரு பகுதி, பெஸ்ட் ரோடு, அம்மன் நகர், பூலுவபட்டி நால்ரோடு ஒரு பகுதி, விக்னேஸ்வரா நகர், சின்ன புதூர், பாலாஜி நகர் மற்றும் அய்யப்பா நகர் ஒரு பகுதி.
அவினாசி துணை மின் நிலையம்: ரங்கா நகர், குள்ளே கவுண்டம்பாளையம் ஒரு பகுதி, கந்தம்பாளையம், கந்தம்பாளையம் நால்ரோடு, ஆட்டையம்பாளையம் ராயர் கோவில் பகுதி, காசிகவுண்டன்புதூர் ஒரு பகுதி, தேவராயம்பாளையம் ஒரு பகுதி மற்றும் எம்.எஸ்., வித்யாலயா பள்ளி பகுதிகள் என மேற்குறிப்பிட்ட துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும்.