பிரபல ஆப்பிள் நிறுவனத்தின் CEO டிம் குக் தமிழ்நாட்டு மாணவர்களை பாராட்டியுள்ளார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 மாணவர்கள் ஐபோன் 13 மினியில் தங்களுடைய சமூகத்தை அழகாக படம் பிடித்து இருக்கின்றனர். இந்நிலையில் அந்த மாணவர்கள் எடுத்த புகைப்படங்கள் Chennai Photo Biennale அதாவது சென்னை எக்மோர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக Chennai Photo Biennale தமிழக மாணவர்களுக்கு A Land of Stories என்ற தலைப்பில் தமிழ்நாட்டின் கதைகள், பாரம்பரியங்கள் மற்றும் கலாச்சாரம் போன்றவற்றை படம் பிடித்து ஒரு டாக்குமென்டரி செய்யுமாறு அறிவித்தது. இந்த புகைப்படங்களை தான் ஆப்பிள் நிறுவனத்தின் CEO Stunning என பாராட்டியுள்ளார்.