Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு.. உதவிகள் கிடைக்கும்… மகிழ்ச்சி பொங்கும்..!!

துலாம் ராசி அன்பர்கள், இன்று முக்கியமான செயலை மறந்து விடுவீர்கள் குடும்ப உறுப்பினர் நினைவு படுத்துவார்கள், தொழில் வியாபாரத்தில் உருவாகிற இடையூறுகளை சரி செய்யவேண்டும். அளவான பணவரவு கிடைக்கும். உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவுகளை மட்டும் உண்ண வேண்டாம், இன்று உங்களுடன் பழகுபவர்கள்  உற்சாகமாக இருக்க வேண்டுமென்று விரும்புவீர்கள். இதுவரை நடக்காமல் இருந்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து, மனநிம்மதி அடைவீர்கள்.

அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் நடந்து முடியும், முக்கிய நபர்கள் மூலம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். இன்றைய நாள் ஒரு சிறப்புமிக்க நாளாக இருக்கும், வெளியூர் பயணம் சிறப்பை கொடுப்பதாக  இருக்கும். உறவினர்  வகையிலும் உதவிகள் கிடைக்க கூடிய அளவில் இருக்கும். இன்று  மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றமும் , மேற்கல்விகாண முயற்சியும் , வெற்றி வாய்ப்புகளும் தேடி வரும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலே இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று  சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா மற்றும் இளம் மஞ்சள்

Categories

Tech |