Categories
மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் பாதிப்பு: விமான நிலையத்தில் ஒத்திகை..!!

விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் நோய் தாக்கிய பயணிக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது என்பது குறித்த ஒத்திகை நடத்தப்பட்டது. 

நூற்றுக்கும் அதிகமானோரை சீனாவில் காவுவாங்கி உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. சென்னை விமான நிலைய பன்னாட்டு முனையத்தின் வருகைப் பகுதியில், சீனாவிலிருந்து வரும் பயணிகளை நவீன கருவி மூலமாக ஸ்கேன் செய்து, கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டால் அப்பயணிக்கு உடனடியாக எவ்வாறு சிகிச்சை அளிப்பது குறித்த ஒத்திகை நடத்தப்பட்டது.

சென்னை விமான நிலைய ஆணையரக அலுவலர்கள், குடியுரிமை அலுவலர்கள், தமிழ்நாடு சுகாதாரத் துறை அலுவலர்கள், விமான நிலைய மருத்துவக் குழு இணைந்து ஒத்திகையில் ஈடுபட்டனர். இந்த ஒத்திகை நிகழ்வில், பயணிக்கு கொரோனா வைரஸ் நோய் இருப்பதைக் கண்டறிந்ததும், அவருக்கு உடனடியாக பாதுகாப்புக் கவச உடை அணிவிக்கப்படுகிறது.

நோய் பரிசோதனை செய்த மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்களும் பாதுகாப்பு உடைகளை அணிந்து நோய் தொற்று ஏற்பட்ட பயணியை விமான நிலையத்திலிருந்து, தயாராக உள்ள 108 ஆம்புலன்சில் ஏற்றி, அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கு அவர் கொரோனா வைரஸ் நோய்க்கான சிறப்பு மையத்தில் அனுமதிக்கப்படுவார் என்பதை ஒத்திகை மூலமாகச் செய்துகாட்டினார்கள்.

Categories

Tech |