விருச்சிக ராசி அன்பர்கள், இன்று உங்களுடைய சிரம சூழ்நிலையை திறமையுடன் சரிசெய்வீர்கள், சாமர்த்தியத்தை நண்பர்கள் பாராட்டுவார்கள். தொழில் வியாபாரம் செழித்து, தாராள பணவரவு கிடைக்கும். குடும்பத்தேவைகளை பெருமளவில் பூர்த்தி செய்வீர்கள். மனைவியின் அன்பில் மகிழ்வீர்கள், இன்று குடும்பத்தில் இருந்த டென்ஷன் விலகும்.
கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் உண்டாகும், சகோதரர் மூலம் நன்மை ஏற்படும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த சிந்தனை மேலோங்கும், உறவினர்கள் நண்பர்களின் உதவியும் கிடைக்கும். இன்றைய நாள் ஒரு சிறப்பான நாளாக இருக்கும், கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப அற்புதமாக இருக்கும்.
இன்று உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாகனம் வாங்க கூடிய யோகமும் இருக்கும். இன்று மாணவச் செல்வங்கள் மட்டும் கல்விக்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும், கடுமையாக உழைத்து பாடங்களை படியுங்கள், படித்ததை எழுதிப் பாருங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலே இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள்