ஜப்பான் நாட்டிலுள்ள டோ என்ற டுவிட்டர் பயனாளர் ஒருவருக்கு நீண்டகால விசித்திர கனவு ஒன்று இருந்துள்ளது. அதாவது அவர் தனது வாழ்க்கையில் நன்றிக்கு எடுத்துக்காட்டாக உள்ள நாய் போன்று உருவம் கொள்ள வேண்டும் என்று விரும்பியுள்ளார். இதற்கான முயற்சியில் இறங்கிய அவர், உண்மையான நாய் வடிவம் கொண்ட உடையை ஜெப்பெட் என்ற நிறுவனத்திடம் இருந்து வாங்க ஏற்பாடு செய்துள்ளார். அந்த நபருக்காக தனித்துவம் வாய்ந்த நாய் வடிவம் கொண்ட உடைய நிறுவனம் உருவாக்கியுள்ளது. இது குறித்த புகைப்படங்களை டுவிட்டரிலும் பகிர்ந்துள்ளது. இதன்படி நாயின் வடிவத்துடன் உடை தயாரானது. அந்த உடை உண்மையான நாயை போல 4 கால்களுடன் நடப்பது போன்ற தோற்றம் அமைந்துள்ளது.
அதனை தொடர்ந்து இந்த உடையை அணிந்து கொண்ட பின்பு அந்த நபர் முழு உருவில் நாய் போன்று காட்சி தந்துள்ளார். அவர் நான்கு கால்களை முன்னும் பின்னும் ஆட்டி, சாய்வாக, படுப்பவது கிட்டத்தட்ட நாயைப் போன்று செயலை செய்து காண்பித்துள்ளார். அது ஒரு மனிதர் என அடையாளம் காண முடியாத அளவுக்கு நாய் என தோற்றம் வெளிப்பட்டது. இந்த உடையை வடிவமைக்க 40 நாட்கள் ஆகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த உடைக்காக ரூ.12 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ பதிவு ட்விட்டரில் வெளியானது. இதனை 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் பார்வையிட்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.