ஜவுளி உற்பத்தியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுல்தான்பேட்டையில் மட்டும் ஏராளமான ஜவுளி உற்பத்தியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் நூல் விலை உயர்வை கண்டித்தும், அதனை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்கள் சேர்ந்த 2 லட்சம் ஜவுளி உற்பத்தியாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.
இது குறித்து வட்டார விசைத்தறியாளர்கள் கூறியதாவது. தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் ஜவுளித்துறை உள்ளது. இதனையடுத்து நூல் விலை உயர்வு காரணமாக ஜவுளி உற்பத்தியாளர்கள், கைத்தறி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் அதிகமாக பாதிக்கப்படுகிறோம். மேலும் குடோனில் வைக்கப்பட்டிருக்கும் காடா துணிகளும் சேதமடைந்துள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என கூறியுள்ளனர்.