உக்ரைனில் நடக்கும் போரில் காயமடைந்த ரஷ்ய வீரர்களை அதிபர் விளாடிமிர் புடின் நேரில் சந்தித்திருக்கிறார்.
ரஷ்யா, உக்ரைன் நாட்டில் தொடர்ந்து போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இதற்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இதில், காயமடைந்த ரஷ்ய வீரர்கள் மாஸ்கோ நகரில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அதிபர் விளாடிமிர் புடின் அந்த மருத்துவமனைக்கு சென்று, காயமடைந்த வீரர்களுக்கு ஆறுதல் கூறியிருக்கிறார். மேலும் நாட்டிற்காக செய்த சேவைக்கு நன்றி கூறியிருக்கிறார்.