Categories
தேசிய செய்திகள்

“ஓடிக்கொண்டிருக்கும்போதே உடைந்து விழுந்த ஓலா ஸ்கூட்டர்”….. தொடரும் புகார்கள்…. புலம்பும் மக்கள்….!!!!

சமீபகாலமாக, மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் மின்சார வாகன உற்பத்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டி பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அதுமட்டுமின்றி தற்போது மின்சார ஸ்கூட்டர்களின் குறைபாடுகளையும் தயாரிப்பின் தரம் குறைந்ததையும் நுகர்வோர்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர்.  எலக்ட்ரிக் ஸ்கூட்டர் துறையில் முன்னணி நிறுவனமான ஓலா மீது புகார்கள் குவிந்து வருகின்றது. ஓடிக்கொண்டிருந்த ஸ்கூட்டர் உடைந்து விழுந்தாக உமாதா என்பவர் ட்விட்டரில் புகார் அளித்துள்ளார். அதில் அவர் குறைந்த வேகத்தில் சென்று கொண்டிருந்த போதே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. முன் போர்க் உடைந்து வாகனம் கழன்று விழுந்தது.

ஸ்கூட்டரின் அந்த பகுதியை மாற்றி அமைக்க வேண்டும். தரமற்ற பொருட்களை பயன்படுத்துவதால் வாடிக்கையாளரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை நிறுவனங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ட்விட்டை ஓலா மற்றும் சிஇஓ பவித் அகர்வால் டேக் செய்து பலர் தங்கள் வருத்தத்தை பகிர்ந்து கொண்டு பதிலளித்துள்ளனர். முன் போர்க் உடைந்ததாக பலர் தெரிவித்து சில புகைப்படங்களையும் பகிர்ந்து உள்ளன. இந்த சம்பவம் குறித்து விவாதிக்கப்பட்டு வருகின்றது. உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம். நீங்கள் கூறியதை நாங்கள் பரிசீலிப்போம் என்று கூறியுள்ளது. முன்னதாக நான்குபேர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீவிபத்தில் பலியானதை தொடர்ந்து 1400 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓலா நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |