சீனா, தைவானுக்கு அருகே போர் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.
தைவான் நாட்டை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா சொந்தம் கொண்டாடி வருகின்றது. இந்நிலையில் தைவான் நாட்டை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்தவும் தயங்கமாட்டோம் என சீனா கூறுகின்றது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா தைவானுக்கு ஆதரவாகவும், ஆயுதங்களை வழங்கியும் வருகின்றது. இதனால் சீனா அமெரிக்காவை கண்டித்து வருகிறது.
கடந்த இரு நாட்களாக ஜப்பானில் நடைபெற்றுள்ள குவாட் மாநாட்டின் இடையே பத்திரிகையாளர்களிடம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தைவான் விவகாரம் குறித்து பேசியதாவது “சீனா, தைவான் மீது படையெடுத்தால் அதில் அமெரிக்க ராணுவம் தலையிட்டு தைவானை பாதுகாக்கும்” என அவர் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் சீனா அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தைவானுக்கு அருகே சீன ராணுவத்தின் போர் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.