இலங்கையின் ராணுவ தளபதியான சவேந்திர சில்வா பதவி விலக போவதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.
இலங்கையின் ராணுவ தளபதியான சவேந்திர சில்வர் வரும் 31-ம் தேதியன்று பதவி விலகப் போவதாக அறிவித்ததை தொடர்ந்து, விகம் லியனகே என்பவர் அடுத்த மாதம் முதல் தேதி அன்று இராணுவத் தளபதியாக பொறுப்பேற்கவுள்ளார்.
கஜபா என்னும் படைப்பிரிவை சேர்ந்த இவர், ராணுவத்தின் தொண்டர் படையினுடைய கட்டளை தளபதியாக பணியாற்றியிருக்கிறார். மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா என்பவருக்கு பின் படைகளின் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றார். இந்நிலையில் அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து நாட்டின் ராணுவ தளபதியாக பதவியேற்க இருக்கிறார்.