ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், கே என் நேரு, பொன்முடி, ஆளுநர் ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
இந்நிலையில் சென்னை வந்த பிரதமர் மோடியைப ஆளுநர் ஆர்.என் ரவி, மத்திய அமைச்சர் எல் முருகன் அமைச்சர் துரைசாமி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் விமான நிலையத்தில் வரவேற்றனர். மேலும் ஐஎன்எஸ் கடற்படை தளத்தில் முதல்வர் முக ஸ்டாலின் பிரதமர் மோடியை வரவேற்றார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார்