மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று நண்பர்களின் செயலை தயவு செய்து குறை சொல்ல வேண்டாம். உடல் ஆரோக்கியம் பேணுதல் போன்ற செயல்களில் ஆர்வம் மிகுந்து காணப்படும் . தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனமே போதுமானதாக அமையும் . இன்று உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். இன்று பணவரவு ஓரளவு திருப்திகரமாக இருக்கும் .
பயணங்கள் செல்ல நேரிடும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடிய சூழ்நிலயும் இன்று இருக்கு .முக்கிய நபர்களின் உதவிகள் கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்க கூடும் . இன்று கணவன் மனைவிக்கு இடையே அன்பு நீடிக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும். உங்களுடைய எதார்த்த பேச்சு இன்று அனைவரையும் கவரும் விதமாகவே இருக்கும்.
இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். கல்வியில் வெற்றி வாய்ப்புக்கள் ஏற்படும். மேற்க்கல்விக்கான முயற்சிகளையும் மேற்கொள்பவருக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும் அது மட்டுமில்லாமல் என்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் எந்த காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான….
அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்டமான எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்டமான நிறம் : வெள்ளை மற்றும் நீலம்
ரிஷபம் ராசி அன்பர்களே…!!இன்று நீண்ட நாள் தவம் இனிதே நிறைவேறும். உறவினர் நண்பர்கள் பெருமையுடன் வாழ்த்துவார்கள். தொழில் வியாபாரம் செழிக்க அதிக அளவில் பணிபுரிவீர்கள். ஆதாய பணவரவு கிடைக்கும். விருந்து விழாவில் கலந்துக் கொள்வீர்கள். கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியை கடைபிடிப்பதன் மூலம் எல்லாவற்றிலும் அனுகுலம் ஏற்படும்.
இன்று டென்ஷனை குறைப்பது நல்லது. கவனத்தை சிதறவிடாமல் உங்களது வேலைகளை சரிவர செய்வது வெற்றிக்கு உதவும். எதிலும் நிதானத்தை கடைபிடியுங்கள் அது போதும் இன்று அக்கம் பக்கத்தினரிடம் எந்தவித வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது ரொம்ப நல்லதாக இருக்கும் .இன்று பணப்பரிவர்த்தனையில் ரொம்ப கவனமாகவே ஈடுபடுங்கள் கூடுமானவரை கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்வது ரொம்ப நல்லது.
இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும் கொஞ்சம் கடுமையாக உழைத்து படங்களை படியுங்கள். எப்போதும் போலவே படித்த பாடத்தை எழுதிப்பாருங்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.அது உங்களுக்கு அதிர்ஷ்ட்டதை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான…
அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்டமான எண் : 5 மற்றும் 9
அதிர்ஷ்டமான நிறம் : ஆரஞ்சு மற்றும் சிவப்பு
மிதுனம் ராசி அன்பர்களே…!! இன்று எண்ணமும் செயலும் சிறந்து காணப்படும். அதிகமான நன்மை இருக்கும். பலரும் அன்பு பாராட்டுகின்ற புதிய சூழலை உருவாக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சியில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். உபரி வருமானம் கிடைக்கும். வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள் இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டியிருக்கும்.
வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லதைக் கொடுக்கும் முக்கிய முடிவு எடுக்கும்போது தடுமாற்றம் கொஞ்சம் ஏற்படலாம்உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறிக்கோளின்றி வேலை செய்யவேண்டியிருக்கும். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் கொஞ்சம் ஏற்படலாம். இன்று கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் ஓரளவே நன்மை கொடுக்கும். பண பரிவர்த்தனைகள் கொஞ்சம் கவனமாகவே இருங்கள்.
இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். கல்வியில் வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவிலே இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான…
அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்டமான எண் : 6 மற்றும் 7
அதிர்ஷ்டமான நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்
கடகம் ராசி அன்பர்களே…!!எதிரியால் இருந்த தொந்தரவு விலகிச்செல்லும். புதிய செயல்கள் எளிதாக நிறைவேறும் .தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். நிலுவைப்பணம் வசூலாகும். இஷ்டதெய்வ அருள்பலம் துணை நிற்கும். தாயின் தேவையை நிறைவேற்றி அன்பு ஆசி பெறுவீர்கள்.
இன்று திறமையாக பேசுவதன் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். தெளிவான சிந்தனை இருக்கும் தொழிலை விரிவுபடுத்த அதிக ஆர்வம் காட்டுவீர்கள். மனதில் உற்சாகம் உண்டாகும். இன்றைய நாள் செல்வச் செழிப்புடன் காணப் படலாம். இன்று நண்பர்கள் மத்தியில் நீங்கள் மதிக்கப்படுவீர்கள். தூர தேசத்து பயணம் செல்வதாக இருந்தால் கொஞ்சம் பொருட்கள் மீது கவனம் இருக்கட்டும். இன்று பயணம் வெற்றிகரமான பயணமாக அமையும்.
இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றமும் மேற்கல்வி காணும் முயற்சியில் வெற்றி வாய்ப்புகளும் கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்ட்டதை கொடுக்க கூடிய அளவிலேயே இருக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான…
அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்டமான எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்டமான நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்
சிம்மம் ராசி அன்பர்களே…!! இன்று எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது ரொம்ப நல்லது. பொது இடங்களில் எவரிடமும் வாக்குவாதம் பேசவேண்டாம் .நிறைவேற வேண்டிய காரியங்களை நீங்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்துதான் நிறைவேற்ற வேண்டியிருக்கும். இன்று பணிகளின் எண்ணிக்கை உங்களுக்கு கூடுதலாகத்தான் இருக்கும். தொழில் வியாபாரத்தில் உள்ள அணுகுளதை பாதுகாக்க வேண்டும். இன்று வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்ள வேண்டும்.
இன்று எதிலும் எச்சரிக்கையும் கவனமும் வேண்டும். தொழில் வியாபாரம் சிறப்படையும் புதிய ஆடைகள் பெறுவதில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்து மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவார்கள். இன்றைய நாள் கொஞ்சம் கடுமையாக இருக்கும். கூடுமானவரை நீங்கள் வாகனத்தில் செல்லும் போது ரொம்ப பெருமையாக செல்ல வேண்டும். பணம் கடன் யாரிடமும் இன்று வாங்காதீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் கூட ரொம்ப கவனமாக செயல்படுங்கள் அதுமட்டுமில்லாமல்.
இன்று யாரிடமும் கடுமையான வார்த்தைகளை பேச வேண்டாம் .அதற்கு ஏற்றார் போல் நடந்து கொள்ளுங்கள். இன்று மாணவச் செல்வங்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். பாடங்களை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் உங்களை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெளிர் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவிலே இருக்கும் .அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான..
அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்டமான எண் : 4 மற்றும் 7
அதிர்ஷ்டமான நிறம் : ஆரஞ்சு மற்றும் வெளிர்பச்சை
கன்னி ராசி அன்பர்களே…!! இன்று தேவைகளை பூர்த்தி செய்ய எண்ணம் உருவாகும். உறவினரின் செயலை குறை சொல்ல வேண்டாம் .தொழில் வியாபாரம் வளர்ச்சியில் தாமதம் கொஞ்சம் ஏற்படலாம் குறைந்த அளவில்தான் பண வரவு கிடைக்கும் அதிகம் பயன்தராதபொருள்களை விலைக்கு வாங்க வேண்டாம். இன்று பயணங்களால் நன்மை ஏற்படும்.
இன்று ஆதாயம் ஓரளவு சிறப்பாக இருக்கும். மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும் சாமர்த்தியமான பேச்சு மூலம் காரியத்தில் அனுகூலமும் ஏற்படும் .குடும்பத்துடன் விருந்து மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உருவாகும். இன்று காதலில் வயப்படக்கூடிய சூழல் இருக்கும் அதுமட்டுமில்லாமல்.
இன்று மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறக் கூடிய சூழல் இருக்கும். மேற் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப நல்ல படியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கு…
அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை
துலாம் ராசி அன்பர்கள், இன்று முக்கியமான செயலை மறந்து விடுவீர்கள் குடும்ப உறுப்பினர் நினைவு படுத்துவார்கள், தொழில் வியாபாரத்தில் உருவாகிற இடையூறுகளை சரி செய்யவேண்டும். அளவான பணவரவு கிடைக்கும். உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவுகளை மட்டும் உண்ண வேண்டாம், இன்று உங்களுடன் பழகுபவர்கள் உற்சாகமாக இருக்க வேண்டுமென்று விரும்புவீர்கள். இதுவரை நடக்காமல் இருந்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து, மனநிம்மதி அடைவீர்கள்.
அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் நடந்து முடியும், முக்கிய நபர்கள் மூலம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். இன்றைய நாள் ஒரு சிறப்புமிக்க நாளாக இருக்கும், வெளியூர் பயணம் சிறப்பை கொடுப்பதாக இருக்கும். உறவினர் வகையிலும் உதவிகள் கிடைக்க கூடிய அளவில் இருக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றமும் , மேற்கல்விகாண முயற்சியும் , வெற்றி வாய்ப்புகளும் தேடி வரும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலே இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா மற்றும் இளம் மஞ்சள்
விருச்சிக ராசி அன்பர்கள், இன்று உங்களுடைய சிரம சூழ்நிலையை திறமையுடன் சரிசெய்வீர்கள், சாமர்த்தியத்தை நண்பர்கள் பாராட்டுவார்கள். தொழில் வியாபாரம் செழித்து, தாராள பணவரவு கிடைக்கும். குடும்பத்தேவைகளை பெருமளவில் பூர்த்தி செய்வீர்கள். மனைவியின் அன்பில் மகிழ்வீர்கள், இன்று குடும்பத்தில் இருந்த டென்ஷன் விலகும்.
கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் உண்டாகும், சகோதரர் மூலம் நன்மை ஏற்படும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த சிந்தனை மேலோங்கும், உறவினர்கள் நண்பர்களின் உதவியும் கிடைக்கும். இன்றைய நாள் ஒரு சிறப்பான நாளாக இருக்கும், கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப அற்புதமாக இருக்கும்.
இன்று உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாகனம் வாங்க கூடிய யோகமும் இருக்கும். இன்று மாணவச் செல்வங்கள் மட்டும் கல்விக்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும், கடுமையாக உழைத்து பாடங்களை படியுங்கள், படித்ததை எழுதிப் பாருங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலே இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள்
தனுசு ராசி அன்பர்கள், இன்று லட்சிய மனதுடன் பணியில் ஈடுபடுவீர்கள், தொழில் வியாபாரம் வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும்,பணவரவு நன்மையை கொடுக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும், இஷ்ட தெய்வ வழிபாடு இன்று நடத்துவீர்கள். இன்று தொடர் கோவம், டென்ஷன் ஏற்படும். எதையும் கட்டுப்படுத்தி கொள்வது ரொம்ப நல்லது. வீண் அலைச்சல், மன குழப்பம், போன்றவை கொஞ்சம் ஏற்படலாம்.
இன்று பொறுமையை கையாளுங்கள் அது போதும். இன்று இழுபறியான காரியங்கள் கூட சாதகமாக முடியும் . ஆனால் வாகனத்தில் செல்லும்போதும் ரொம்பக் கவனமாக செல்ல வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் கையாள முழுதும் கூடுதல் கவனத்துடன் செய்வது ரொம்ப நல்லது. இன்று முடிந்தால் ஆலய வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் சிறப்பாக நடக்கும்.
இன்று வெளியூர் பயணத்தின் போது ரொம்ப கவனமாக செல்லுங்கள், உடைமைகள் மீது ரொம்ப கவனமாக இருங்கள், உடல் ஆரோக்கியத்திலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். இன்று மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் இருந்த தடை விலகி செல்லும் கல்வியில் முன்னேற்றம் உண்டு.விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் ஏற்படும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலே இருக்கும். அது மட்டுமில்லாமல் சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை
மகர ராசி அன்பர்கள், இன்று எந்தச் செயலையும் நீங்கள் பரிசீலனை செய்து தான் செய்ய வேண்டும், தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற நண்பரால் உதவிகள் உண்டாகும். புதிய இனங்களில் செலவு ஏற்படலாம், உறவினர்களை சந்திக்கும் வாய்ப்பு உருவாகும். இன்று குடும்பத்தில் எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்படலாம், கணவன், மனைவிக்கு இடையே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
பிள்ளைகளிடம் பக்குவமாக நடந்து கொள்வது நன்மையைக் கொடுக்கும். உறவினர்கள், நண்பர்களின் வருகை இன்று இருக்கும், செலவு கொஞ்சம் அதிகம் ஆகும், கூடுமானவரை செலவு மட்டும் கொஞ்சம் கட்டுப்படுத்தி கொள்ளுங்கள், இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி செல்லும், நல்ல முன்னேற்றமான வாய்ப்புகள் இருக்கும். கொஞ்சம் கூர்மையாக கவனத்துடன் பாடத்தை படிப்பது ரொம்ப நலல்து, படித்த பாடத்தை எழுதி பாருங்கள் ரொம்ப சிறப்பாக இருக்கும். இன்று காதலர்களுக்கு பயப்பட கூடிய சூழல் இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்ட்டத்தை கொடுக்க கூடிய அளவிலே இருக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள்,அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்
கும்ப ராசி அன்பர்கள், இன்று சிலர் தந்த வாக்குறுதிக்கு மாறாக செயல்படும், சுயகௌரவம் பாதுகாக்க வேண்டும், தொழில் வியாபாரம் செழிக்க புதிய முயற்சி மேற்கொள்வீர்கள். சுமாரான அளவில் பணவரவு கிடைக்கும், மருத்துவ சிகிச்சை உடல் ஆரோக்கியம் பெற உதவும், இன்று எல்ல வகையில் நன்மை உண்டாகும்,
எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்க்கு உதவி செய்து அதன் மூலம் நல்ல மதிப்பு பெறுவீர்கள். இன்று உடல் ஆரோக்கியத்தை கவனமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள். காதலில் பயப்படக்கூடிய வாய்ப்புகள் இன்று இருக்கின்றன. திருமண முயற்சிகளுக்கு காத்திருந்தவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும், இன்று கொடுக்கல் வாங்கல் பற்றி எந்தவித பிரச்சினையும் அதுமட்டுமில்லாமல் இன்று பணம் பரிவர்த்தனை சிறப்பாகவே இருக்கும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்ட்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று என்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அதுபோலவே மாணவர்களுக்கு கல்வியில் இன்று எந்தவித பிரச்சினையும் இல்லாமல் முன்னேற்றமாக செல்லும். விளையாட்டுத் துறையிலும் வெற்றி வாய்ப்புகள் வந்து குவியும்.
அதிர்ஷ்டடமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீலம்
மீனம் ராசி அன்பர்கள், இன்று செயல்களில் தியாக குணம் நிறைந்திருக்கும், தொழில் வியாபார நடைமுறையில் இருந்து குறிக்கோளும் விலகிச்செல்லும் உற்பத்தி விற்பனை செழித்து ஆதாய பணவரவு பெறுவீர்கள். வீட்டு உபயோக பொருட்களை வாங்க கூடும், குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும், தொழில் வியாபாரமும் சிறப்பாக இருக்கும். சாதுர்யமான பேச்சு மூலம் காரிய வெற்றியும், வியாபாரத்தில் கூடுதல் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள்.
விலகி சென்ற வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள், உத்யோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான செயல் மூலம் காரிய வெற்றியும் காண்பீர்கள், இன்றைய நாள் உங்கள் செயல்பாடுகளில் வெற்றி ஏற்படும் நாளாகவே இருக்கும். இன்று மாணவ செல்வங்களுக்கு கல்வியில் கொஞ்சம் தடை இருக்கும். கூடுமானவரை நீங்கள் பாடங்களை கொஞ்சம் தெளிவாகப் படிக்க வேண்டும், சந்தேகம் ஏதும் இருப்பின் ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு உங்களுக்கு அதிர்ஷ்டடத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டும் இல்லை இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அணைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் சிவப்பு