ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், கே என் நேரு, பொன்முடி, ஆளுநர் ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடியை ஐஎன்எஸ் கடற்படை தளத்தில் முதல்வர் முக ஸ்டாலின் வரவேற்றார்.
இந்நிலையில்நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் இந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆளுநர் ரவி, மத்திய இணை அமைச்சர் வேல்முருகன் தமிழக அமைச்சர்கள் பங்கேற்றனர். விழா தொடங்கிய உடனே தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதை தலைவணங்கி ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி எழுந்து நின்று மரியாதை செலுத்தினார். திட்டங்களை தொடங்கி வைப்பதற்கு முன்பாக முதல்வர் ஸ்டாலின் பேசினார். இதனைத் தொடர்ந்து சென்னை பெங்களூர் 4 வழி சாலை திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.