Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இரட்டை கொலையில் தலைமறைவு…. 8 வருடங்களுக்கு பின் போலீசார் அதிரடி கைது…!!!!!!

2  பேரை கொலை செய்த குற்றவாளியை  8 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள வ.உ.சி நகரில் குணசுந்தரி என்பவர் வசித்து வந்துள்ளர். இவருக்கு 7 வயதில் மகேஷ்குமார் இந்த மகன் இருந்துள்ளார். இந்நிலையில் குணசுந்தரியின்  கணவரான மாரி  உடல்நிலை குறைவால் இறந்துவிட்டார். இதனால் அவர் கடந்த 2014-ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ராஜ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு அவருடன் சேர்ந்து ஒரு மாதம் வாழ்ந்துள்ளார். இதனையடுத்து ராஜ் குணசுந்தரியை  கொடுமைப்படுத்தியதால் அவர் மீண்டும் தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். இதனையடுத்து தனது மாமியார் வீட்டிற்கு வந்த ராஜ் மீண்டும் தகராறு செய்து குணசுந்தரி மற்றும் அவரின் மகன் மகேஷ்குமார் ஆகிய 2 பேரையும் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.  தற்போது  இந்த வழக்கை ஒரு வார காலத்திற்குள் முடிக்க துணை கமிஷனர் சுந்தர் உத்தரவிட்டார். இதனால் தனிப்படை குழுவினர் ஆந்திராவில் கடந்த 4 நாட்களாக முகாமிட்டு ராஜை  தீவிரமாக தேடி வந்தனர். மேலும் ஆந்திர காவல்துறையினருக்கு வாட்ஸ்-அப் குரூப்பிலும்  அவரது  புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து தனிப்படை காவல்துறையினர் பக்கோடா கடையில் வைத்து 2 பேரை கொலை செய்த ராஜை  சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

Categories

Tech |