பள்ளியை சூறையாடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மேட்டூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பள்ளியில் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் மின்விசிறி, டியூப் லைட், டேபிள்கள் மற்றும் கழிவறை போன்றவற்றை சேதப்படுத்தியுள்ளனர்.
தற்போது மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வருவதால் வகுப்பறையில் உள்ள பொருட்கள் சேதம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.