கிணற்றுக்குள் மூழ்கிய லாரி கிரேன் மூலம் மீட்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு நாராயணன் பாளையத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரிக் லாரி வைத்து ஆள்துளை கிணறு தோண்டும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பழனிக்கவுண்டன் பாளையத்தில் இருக்கும் ஒரு தோட்டத்தில் ஆள்துளை கிணறு தோண்டுவதற்காக பிரகாஷின் ரிக் லாரி சென்றுள்ளது.
இதனையடுத்து ரிக் லாரி பின்னோக்கி நகர்ந்த போது எதிர்பாராதவிதமாக 50 அடி ஆழ கிணற்றின் பக்கவாட்டு சுவர் சரிந்து விழுந்தது. இதனால் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி லாரி தண்ணீரில் மூழ்கியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் ராமசாமியும், கிளீனர் வேலனும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நேற்று காலை முதல் லாரியை மீட்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்றுள்ளது. இதற்காக இரண்டு கிரேன் வரவழைக்கப்பட்டு கிணற்றுக்குள் இருந்த லாரி மீட்கப்பட்டது.