Categories
பல்சுவை

“7 வருடங்களாக” ஒரே மாதிரியான எக்ஸ்பிரஷன்ஸ்…. போட்டோவில் அசத்திய நபர்….!!

உலகில் உள்ள அனைத்து மனிதர்களுமே பொதுவாக புகைப்படங்கள் எடுக்கும் போது ஒவ்வொரு புகைப்படத்திலும் சற்று வித்தியாசமாகத்தான் காணப்படுவார்கள். ஆனால் ஒருவர் தன்னுடைய 12 வயது முதல் தனக்கு திருமணம் ஆகும் வரை தன்னை தொடர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார். அவர் இதுவரை மொத்தம் 2,500 புகைப்படங்கள் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை தொடர்ந்து 7 ஆண்டுகளாக எடுத்துள்ளார். இந்நிலையில் அவர் எடுத்த அனைத்து புகைப்படங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் போது 12 வயது முதல் திருமண வயது வரை எடுத்த அனைத்து புகைப்படங்களிலும் ஒரே மாதிரியான எக்ஸ்பிரஷன்ஸ் தான் கொடுத்திருப்பார்.

ஆனால் அந்த புகைப்படங்கள் அனைத்தும் வெவ்வேறு சூழ்நிலைகளில் எடுக்கப்பட்டவையாகும். இருப்பினும் 2500 புகைப்படங்களிலும் ஒரே மாதிரியான எக்ஸ்பிரஷன் கொடுத்த அவரை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். மேலும் அவர் தான் எடுத்த போட்டோக்களில் ஒரே ஒரு போட்டோவில் மட்டும் சிரித்துக் கொண்டிருப்பார். அதாவது அவருடைய திருமணத்தன்று எடுத்த போட்டோவில் மட்டுமே சிரித்தவாறு இருப்பார்.

Categories

Tech |