இந்தி தொலைக்காட்சி தொடர்கள், படங்களில் நடித்து வரும் கரண் மெஹ்ராவும், தொலைக்காட்சி நடிகை நிஷா ராவலும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். நிஷாவும், கரணும் ஆறு ஆண்டுகள் காதலித்து, 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். 2017ம் ஆண்டு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் நிஷா. இந்தி சின்னத்திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் கரண் மெஹ்ரா. அவர் பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர். கரண் தன்னை தாக்கியதுடன், தன் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 கோடி எடுத்துவிட்டதாக காவல் நிலையத்திற்கு சென்றார் நிஷா.
இதையடுத்து 31.05.2021 அன்று கோரேகாவ்ன் காவல் நிலையத்தில் கரண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கரண் தன்னை தாக்கி காயப்படுத்தியதாகவும், அவருக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாகவும் நிஷா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நிஷாவை அடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட கரண், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். நிஷா தொடர்ந்த வழக்கை அடுத்து கரணும் அவரது குடும்பத்தாரும் முன்ஜாமீன் பெற்றார்கள்.
கரண் தற்போது ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது, நிஷாவுக்கும், ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. அதை அந்த நபரே ஒப்புக் கொண்டார். அதன் பிறகும் அந்த நபரை எங்கள் வீட்டிற்குள் அனுமதித்தேன். மீண்டும் வாழ்க்கையை புதிதாக தொடங்க நினைத்தேன். பின்னர் மகன் கவிஷ் பிறந்தான். அந்த கள்ளத்தொடர்பு ஆசாமி இன்னும் எங்கள் வீட்டில் தான் வசித்து வருகிறார். கடந்த 11 மாதங்களாக எங்கள் வீட்டில் தங்கியிருக்கிறார் என கரண் மெஹ்ரா கூறியுள்ளார்.