Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“இவர்கள்தான் கொள்ளை அடித்தது” வசமாக சிக்கிய 3 தம்பதிகள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் அதிரடியாக உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த குமார் தலைமையிலான காவல்துறையினர் கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது 3 தம்பதிகள் என்பதும், அவர்கள் தமிழகம், தெலுங்கானா மாநிலங்களில் கொள்ளையடித்ததும்  தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர்  கொள்ளையடித்த சூர்யா, அவரது மனைவி பாரதி, மணி, அவரது மனைவி மீனா, விஜய், அவரது மனைவி லட்சுமி ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 40 பவுன் தங்க நகை மற்றும் 75 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் மீது தமிழகம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சுமார் 70  வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது

Categories

Tech |