டிவிட்டர் நிறுவனம் அமெரிக்க நாட்டு அரசுக்கு ரூ. 1160 கோடி அபராதம் செலுத்துவதாக ஒப்புக்கொண்டுள்ளது.
பல்வேறு நிறுவனங்கள் தங்களது விளம்பர தகவல்களை அனுப்புவதற்கு, டிவிட்டர் வாடிக்கையாளர் எண்களை தந்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களின் ரகசியத்தை காக்க தவறிவிட்டதால் டிவிட்டர் நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு ரூ. 1160 கோடி அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதத்தினை செலுத்துவதற்கு டிவிட்டர் நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது.