Categories
அரசியல்

“வீடு கட்டுவோருக்கு செம ஜாக்பாட்”…… அரசின் உதவி தொகை உயருது….!!!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் வீட்டுவசதி திட்டத்திற்கான அரசின் உதவித் தொகையை ரூபாய் 4 லட்சமாக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் அனைவருக்கும் வீட்டு வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டம் மத்திய அரசு தரப்பிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ்  மானியத்தோடு வீடு கட்டுவதற்கு கடன் கிடைக்கிறது. இந்நிலையில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுபவர்களுக்கு விரைவில் 2 லட்சம் வழங்கப்பட உள்ளது. அதாவது தற்போது வழங்கப்படும் தொகையை காட்டிலும் மூன்று மடங்கு தொகை கூடுதலாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. வீடுகட்டும் செலவு அதிகரித்துள்ளதால் இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.

வீடு கட்டுவதற்கான செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உதவி தொகையை உயர்த்தி வழங்க சட்டமன்றத்தின் மதிப்பீட்டு குழு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு வீடு கட்டுவதற்கு 4 லட்சம் ரூபாய் வரை வழங்குவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கான கோரிக்கை மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளில் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது வீடு கட்ட தேவையான செலவுகள் அனைத்தும் உயர்ந்துள்ளது.

மணல், சிமென்ட் கம்பி, செங்கல் போன்றவற்றின் விலை காரணமாக கிராமப்புறங்களில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளின் விலை அதிகரித்துள்ளது. முதலில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் தங்கள் தரப்பில் இருந்து 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை கொடுக்க முடியாது என்று விவாதிக்கப்பட்டது. இதுபோன்ற சூழ்நிலையில் மத்திய மாநில அரசுகளின் உதவியுடன் செயல்படுத்தப்படும் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளின் விலையை 1.20 லட்சத்திலிருந்து 4 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது .

Categories

Tech |