Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வர்களே….. இன்றே(மே 27) கடைசி நாள்….. உடனே போங்க…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

நீட் தேர்வுஜூலை 17ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தேர்வு வாரியத்தில் இருந்து இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில பாடங்களில் சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.  நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு ஏற்கனவே நிறைவடைந்தது.

இந்நிலையில் நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களில் திருத்தம் இருந்தால் மே 27ம் தேதிக்குள் மேற்கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் திருத்தங்களை இன்றுக்குள் மேற்கொள்ளலாம். மேலும் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு, தேர்வு மைய விவரங்கள் உள்ளிட்டவை பின்னர் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |